Friday 12 June 2015

Thendral vanthu theendum pothu song

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

No comments:

Post a Comment